Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்!

#image_title

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்!

பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாக மூலிகை பேஸ்ட் பயன்படுத்துங்கள். இந்த மூலிகை பேஸ்ட் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

மூலிகை பேஸ்ட் தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்…

*வேப்பிலை பொடி
*திரிபலா சூரணம்
*இலவங்கப்பட்டை
*கொட்டாங்குச்சி
*துளசி பொடி
*மஞ்சள் தூள்
*உப்பு
*தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவு வேப்பிலை பொடி சேர்க்கவும். வேப்பிலையை உலர்த்தி பொடியாக்கி சேர்க்கலாம். அல்லது நாட்டு மருந்து கடைகளில் வேப்பிலை பொடி கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

அடுத்து திரிபலா சூரணம், இலவங்கப்பட்டை தூள், துளசி பொடி சம அளவு சேர்த்துக் கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கொட்டாங்குச்சியை எரித்து சாம்பலாக்கி அதை 2 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் சேர்த்து கலந்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை ஒரு டப்பாவில் போட்டு வைத்து பல் துலக்கும் பிரஸில் சேர்த்து நன்கு துலக்கவும். இதனால் நாளடைவில் பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு, மஞ்சள் பல் உள்ளிட்ட பல், ஈறு தொடர்பான அனைத்து பிரச்சனையும் நீங்கும்.

Exit mobile version