சர்வதேச அளவில் சொந்த நாட்டை விட்டு குடும்ப சுமைக்காக வெளிநாட்டில் வேலை செய்யும் மக்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் படி, சிறந்த வேலை செய்யும் இடமாகவும், மகிழ்ச்சியுடன் வாழத்தக்க சூழ்நிலையாக இருக்கும் நாடு எது என்ற கேள்விக்கு தைவானுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
கணக்கெடுப்பின்படி 75 சதவீதம் பேர் தைவானில் மிகவும் மகிழ்ச்சியுடன் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதிலும் 74 சதவீதம் பேர்கள் வேலை மற்றும் வாழ்க்கை குறித்து அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் அங்கு உள்ள பொருட்களின் விலைவாசி பற்றி 78 சதவீதம் பேரும், மேலும் மருத்துவ சிகிச்சையின் தரம் பற்றி 96 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
80 சதவீதம் மக்கள் பொது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ தைவான் நாடு ஏற்ற நாடாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
மேலும் 62 சதவீதம் மக்கள் அந்நாட்டில் நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவருடன் மிக நெருக்கமாக பழகுவது இலகுவாக உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த டாப் 10 பட்டியலில் மெக்ஸிகோ இரண்டாவது இடத்திலும் , கோஸ்டாரிகா மூன்றாம் இடத்திலும் தென்கிழக்கு ஆசிய நாடு மலேசியா நான்காம் இடத்திலும் உள்ளது. மற்ற நாடுகளில் 69 சதவீதம் மக்கள் வேலை மகிழ்ச்சிகரமாக உள்ளது என்று சொல்லியுள்ளனர்.
மொத்தம் 85% வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் போர்ச்சுகல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஈக்வடார், கனடா, வியட்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.இதில் மலேசியாவுக்கு அடுத்தப்படியாக தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் 10-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு 86% பேர் தங்கள் வேலை மகிழ்ச்சியை தருவதாக கூறியுள்ளனர்.