Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எம்.ஆர் ராதாவுடன் நடிக்க மாட்டோம் என அலறிய உச்ச நடிகர்கள்! காரணம் என்ன தெரியுமா?

#image_title

எம்.ஆர் ராதாவுடன் நடிக்க மாட்டோம் என அலறிய உச்ச நடிகர்கள்! காரணம் என்ன தெரியுமா?

மறைந்த நடிகர் எம்.ஆர் ராதா அவர்களுடன் நடிக்கவே அலறிய ஒரு சில நடிகர்கள் அவரை பற்றி என்ன கூறினார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நடிகவேல் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட நடிகர் எம்.ஆர் ராதா அவர்களின் முழுப்பெயர் மெட்ராஸ் ராஜகோபாலான் ராதாகிருஷ்ணன் ஆகும். இவர் நடிகர் என்பதை விட பெரியாரின் தொண்டன் என்று கூறலாம். நடிகர் எம்.ஆர் ராதா அவர்களின் நடிப்புத் திறமைக்கு நிகர் அவரே. அவர் நடித்த பலே பாண்டியா படத்தில் இடம்பெற்றுள்ள “மாமா மாப்ளே” என்ற பாடலில் “நீயே உனக்கு என்றும் நிகரானவன்” என்ற வரிகள் இவருக்கு பொருந்தும். அந்த அளவுக்கு திறமையாக நடிக்கக் கூடிய நடிகர் எம்.ஆர் ராதா அவர்கள் ஆவார்.

இவருடைய நடிப்புத் திறமைக்கு பல படங்களை எடுத்துக் காட்டாக கூறலாம். குறிப்பாக இவர் நடிப்பில் 1954ம் ஆண்டு வெளியான இரத்த கண்ணீர் திரைப்படத்தை கூறலாம். இரத்த கண்ணீர் திரைப்படத்தில் தன்னுடைய முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருப்பார். அதன் பிறகு இவர் இரத்தக் கண்ணீர் எம்.ஆர் ராதா என்றும் அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட நடிகருடன் ஒரு சிலர் நடிக்க அலறிய சம்பவங்கள் நடந்துள்ளது. யார் அந்த நடிகர்கள் என்று பார்க்கலாம்.

நடிகர் சிவாஜி கணேசன்…

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி நமக்கு தெரியும். இவருடைய நடிப்புத் திறமை உலகப் புகழ் பெற்றது. அப்படிப்பட்ட ஒருவர் நடிகர் எம்.ஆர் ராதா அவர்களுடன் நடிக்க தயங்கினார். இது குறித்து மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு நேர்காணலில் “ஒரு காட்சியில் நானும் அண்ணனும் நடிக்குமாறு காட்சி இருந்தால் நான் சற்று ஜாக்கிரதையாகத் தான் இருப்பேன். ஏன் என்றால் அவர் என்னை விடவும் மிகவும் சிறப்பாக நடிப்பார். ஒரு நொடி அசைவில் கூட என்னை காலி செய்து விடுவார்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சுனில் தத்…

நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் வெளியான பாகப்பிரிவினை திரைப்படம் ஹிந்தியில் கண்டன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் பிரபல நடிகர் சுனில் தத் அவர்கள் நடித்திருந்தார். தமிழில் வெளியான பாகப்பிரிவினை திரைப்படத்தில் நடிகர் எம்.ஆர் ராதா அவர்கள் சிங்கப்பூர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாப்பாத்திரம் குறித்து நடிகர் சுனில் தத் அவர்கள் “சிங்கப்பூர் சிங்காரம் கதாப்பாத்திரத்தில் நடிகர் எம்.ஆர் ராதா அவர்களைப் போல நடிக்க ஹிந்தி திரையுலகில் ஆள் யாரும் இல்லை. இதை நினைக்கும் பொழுது வருத்தம் அளிக்கிறது” என்று கூறினார்.

நடிகர் என்.டி ராமாராவ்…

அதே பாகப்பிரிவினை திரைப்படம் தெலுங்கில் கலாசி உன்டே கலடு சுகம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் என்.டி ராமாராவ் அவர்கள் நடித்துள்ளார். இவரும் நடிகர் எம்.ஆர் ராதா அவர்கள் நடித்த சிங்கப்பூர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அவரைப் போல ஒரு நடிகர் தெலுங்கு சினிமாவில் இல்லை என்பதை நினைத்தால் சோகமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

இவ்வாறு பல பெரிய நடிகர்களும் இவருடன் நடிக்க பயந்துள்ளனர். காரணம் நடிகர் எம்.ஆர் ராதா அவர்கள் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் மற்ற நடிகர்களை விட சிறப்பாக நடிப்பார் என்பதுதான். அதனால் தான் பலே பாண்டியா திரைப்படத்தில் நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற வரிகளை வைத்துள்ளனர்.

Exit mobile version