Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிழித்து தொங்க விட்ட போஸ்டர்…! கடும் ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்…!

திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை அவமதிக்கும் போஸ்டர்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் வழக்கறிஞர் அணியின் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை தொடர்ந்து அதிமுக கூட்டணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக கூட்டணி சார்பாக ஸ்டாலின் அவர்களும் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்க இருக்கிறார்கள்.

இந்தநிலையில் திருச்சியில் பல இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை கிண்டல் அடித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது அந்த சுவரொட்டிகளில் தன்னம்பிக்கை மிக்க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் துண்டு சீட்டு தலைவர் என்று ஸ்டாலின் அவர்களையும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன இன்னொரு போஸ்டரில் பிறப்பை நம்பலாமா என்று ஸ்டாலினையும் உழைப்பை நம்பலாமா என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் குறிப்பிடும் விதமாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த காரியத்தை செய்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியாததால் திமுகவினர் இடையே அதிர்ச்சி ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து திமுக தலைவரை அவமதிக்கும் முறையில் போஸ்டர்களை ஒட்டியவர்கள் யாரென்று தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் அணி சார்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது.

Exit mobile version