Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

Tortured daughter-in-law locked in separate room for dowry! 4 arrested in family

Tortured daughter-in-law locked in separate room for dowry! 4 arrested in family

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

புதுச்சேரியில் அடுத்த வில்லியனூர் பகுதியில் வரதட்சணையாக கார் வாங்கி தரக்கோரி மருமகள் பெண்ணை தனி அறையில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கனூர் பகுதியில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகள் செவ்வந்தி இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த புரட்சி வேந்தன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

அந்த திருமணத்தின் போது அவரது பெற்றோர் பெண்ணுக்கு 20 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் மற்றும் மாப்பிள்ளைக்கு 5 பவுன் நகை மற்றும் கார் வாங்க இரண்டு லட்சம் ரொக்கப் பணமும் கொடுத்தனர். ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு புரட்சி வேந்தனின் தாய், தந்தை மற்றும் புரட்சி வேந்தன் அந்த பெண்ணை தனி அறையில் அடைத்து வைத்து, உணவு கொடுக்காமல் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி செவ்வந்தி தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவரது பெற்றோர் மருமகனிடம் நியாயம் கேட்டு மகளை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்கள் கொடுமை படுத்தியது குறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனுவும் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இனிமேல் வரதட்சணை கேட்க மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.

எனவே மீண்டும் தன் கணவனுடன் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி உள்ளார் அந்த பெண். ஆனால் மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு அவர் தன் பெற்றோர் மற்றும் உறவினர் பெண் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் வரதட்சணையாக கார் வாங்கி தர வேண்டும் என்று மனைவியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் செவ்வந்தி புகார் அளித்ததன் பேரில், அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version