பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

0
326
Total ban on bike taxi!! Action taken by District Collector!!
பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!
மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில்  ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பைக் டாக்ஸி மூலம் மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது.
இறுதியில் மதுரை மாநகரில் பைக் டாக்ஸிக்கு முழு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானமும் ஏற்பட்டதை தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் அவர்கள் மதுரை மாவட்ட பகுதிக்குள் பைக் டாக்ஸி இயங்க முழுவதுமாக தடை விதித்தார்.
மற்றொருபுறம், சுமார் 2000 பைக்குகளை உறுப்பினர்களாக்கி பைக் டாக்ஸிகள் இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 40 பைக்குகளை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இனி யாரும் மதுரை மாவட்டத்திற்குள் பைக் டாக்ஸியை ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ரேப்பிடோவில் பைக் ஓட்டும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரேப்பிடோவில் இயங்கும் பைக்குகளை பறிமுதல் செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையிலும் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளிட்ட மேலும் சில முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்படத்தக்கது.