விளக்கை வைத்து மாய மந்திரங்கள் செய்து டாக்டரை ஏமாற்றி 2.5 கோடி பணத்தை ஏமாற்றிய சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற மாவட்டத்தில் லி கான் என்ற வயதான டாக்டர் ஒருவர் இருந்துள்ளார். அவர் லண்டனில் படித்து முடித்துவிட்டு இங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
மருத்துவ உதவிக்காக சமீனா என்ற பெண்ணின் வீட்டிற்கு இவர் அடிக்கடி போய் வந்துள்ளார்.சிகிச்சை அளிப்பதற்காக சமீனாவின் வீட்டிற்கு டாக்டர் லீ கான் சென்று வந்தார் என சொல்லப்படுகிறது.
அப்பொழுது சமீனாவின் கணவர் இஸ்மாயில் என்பவர் டாக்டருடன் மிகவும் நெருங்கிய நட்பாக பழகி வந்துள்ளார்.
மிகவும் நெருங்கிய பழகிய உள்ளதால் இஸ்மாயில் ஒரு விளக்கை காண்பித்து அதில் மாய மந்திரங்கள் செய்து காட்டி டாக்டரை மயக்கி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அந்த டாக்டர் இஸ்மாயில் இடம் இந்த விளக்கு நான் என்ன கேட்டாலும் தருமா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு இஸ்மாயில் எதுவென்றாலும் கொடுக்கும் நிறைய பொன் பொருளையும் கொடுக்கும். அழகான பெண்ணையும் கொடுக்கும் என ஆசை வார்த்தை கூறி அவரை மயக்கி உள்ளார்.
அந்த டாக்டரும் அதை உண்மை என நம்பி அதனை வாங்கி வைத்துள்ளார் அதனால் இஸ்மாயில் அவனிடம் பல தவணைகளில் 2.5 கோடி முதல் வாங்கி விளக்கை கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த விளக்கினை அவர் சொன்னபடி தொட்டபோது அதிலிருந்த ஒன்றும் வரவில்லை. இதனால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த டாக்டர்.அந்த இஸ்மாயில் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .