Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

#கேரளா : வெளிநாட்டு பயணிக்கு பாலியல் தொல்லை.. காப்பாற்ற சென்றவருக்கும் அடி உதை..!

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா கடவுள்களின் தேசம் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், திருவனந்தபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சோவாரா கடற்கரைக்கு சென்றுள்ளார். அவர் சென்ற டாக்சியின் ஓட்டுநர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து அந்த விடுதியின் சமையல்காரர் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற போது அவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதலில் வழக்குபதிவு எதுவும் செய்யவில்லை எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னரே வழக்குபதிவு செய்யபட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version