இனி சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்! வருகிறது புதிய தளர்வுகள்!

0
131

உலகம் முழுவதும் கொரோனா நான் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் முதலில் கொரோனா பாதிப்பு பதிவாகியது. கொரோனா குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட போதே அம்மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது.             

இதன் காரணமாக இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பிற்கான எண்ணிக்கை குறைவாக தற்பொழுதும் உள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளையும் அம்மாநில மக்களுக்காக கேரள அரசு அறிவித்தது. இதில் ஒரு பாகமாக கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள இரவிகுலம் சுற்றுலாத்தலம் 7 மாதங்களுக்கு பிறகு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.        

வரையாடுகளின் வாழ்விடமாக இருக்கும் இந்த இரவிகுலம் சுற்றுலாத்தளம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவற்றின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில் வருடாவருடம் மூடப்படும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த சுற்றுலா தளம் திறக்கப்படவில்லை.              

தற்பொழுது 7 மாதங்களுக்கு பிறகு இந்த சுற்றுலாத்தலம் திறக்கப்பட்டதால் இத்தனை மாதங்களாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த நிலையில் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.                            கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியே இந்த சுற்றுலா தளத்தில் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.