Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!!

Tourists banned from bathing ...? Tourists who go with disappointment !!

Tourists banned from bathing ...? Tourists who go with disappointment !!

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!!

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் போல் நீர் வரத்து அதிகரித்துள்ளது . இதனால் அங்கு குடியிருக்கும் மக்களை தங்களையும் தங்கள் உடமைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து 8000 கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், நீர் வரத்தை காணவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் அதில் உள்ள ஆபத்தை கருத்தில் கொண்டு அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version