Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடியரசு தின விழாவில் விவசாயிகளால் ஏற்பட்ட பதற்றம்! உச்ச கட்ட பரபரப்பில் டெல்லி!

நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ,மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்து டெல்லியை மையமாக வைத்து டிராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக, அரியானா, பஞ்சாப் ,போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய நாட்டின் குடியரசு தினமான இன்றைய தினம் தலைநகர் டெல்லியில் பேரணி நடத்த இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னரே அறிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், விவசாயிகளுடைய டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் விவசாயிகள் டெல்லியை மையமாக வைத்து புறப்பட தொடங்கினார்கள். குடியரசு தினத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது ,என்று ஒரு சில கடுமையான நிபந்தனைகளுடன் பேரணிக்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.

டெல்லி காவல்துறையின் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட விவசாய சங்கங்கள், குடியரசுதின விழா முடிந்த பின்னர் தங்களுடைய பேரணி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். ஆனாலும் அதற்கு முன்பாகவே காலை 9 மணி அளவில் சென்னையில் இருந்து விவசாயிகள் தங்களுடைய பேரணியை தொடங்கி இருக்கிறார்கள். கஞ்சவாலா சொவுக் ஆச்சண்டி முடிய பேரணி ஆரம்பித்தது. ஹரியானா, மற்றும் ,டெல்லி ,எல்லை பகுதியாக இருக்கும் டிகிரி பகுதியில் காவல்துறையினர் அமைத்து வைத்திருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு விவசாயிகள் தங்களுடைய பேரணியை வழிநடத்தி சென்றிருக்கிறார்கள். குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரின் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டிராக்டர்கள் உடன் பேரணி நடந்து வருவதால் மிகப்பெரிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

Exit mobile version