அமெரிக்காவில் இரண்டாவது முறையாக டிரம்ப் அவர்கள் அதிபராக பதவியேற்றது முதல் பல உலக நாடுகளுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார். அதில் மிகவும் முக்கியமான மற்றும் பங்கு சந்தைகள் முதல் தங்கம் விலை வரை உயர காரணமாக இருக்கக்கூடியது அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட வரிவிதிப்பு.
பல நாடுகளுடன் நட்புறவில் இருப்பதாக கூறினாலும் வரித் விதிப்பை பொருத்தவரை இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்காவிற்கு எதிரி நாடுகள் என அமெரிக்கா அதிபர் அறிவித்திருக்கிறார். மேலும் இந்தியா கனடா மெக்ஸிகோ போன்ற நகரங்களில் அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் பொழுது எவ்வளவு வரி விதிப்பு செய்கிறார்களோ அதே போன்று அந்த நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதும் வரிவிதிப்பை உயர்த்துகிறார் அமெரிக்க அதிபர்.
இது மட்டுமில்லாது தற்பொழுது ஐரோப்பிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் வரிவிதிப்பானது அதிகரிக்கப்படும் என்றும் கடந்த புதன்கிழமையிலிருந்து பழைய வரி விதிப்புகள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த ஐரோப்பிய நாடு அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பை விதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, இரண்டு கட்டமாக வரிவிதிப்பு நிகழ்த்த இருப்பதாகவும் முதல் கட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி என்றும் இரண்டாவது கட்டம் ஏப்ரல் 13ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்றும் ஐரோப்பிய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற கூடுதல் வரிவிதிப்புகள் உலக நாடுகள் இடையே இருப்பது தங்கம் விலை மற்றும் பங்குச் சந்தை போன்ற பலவற்றின் நிலை தடுமாற்றங்களையும் விலை உயர்வுகளையும் ஏற்படுத்தும் என பலரும் அச்சம் கொண்டிருக்கின்றனர்.
மேலும், ஐரோப்பிய நாட்டினுடைய இந்த முடிவானது உலக நாடுகளை ஆச்சரியமடைய செய்வதுடன் அதிபர் ட்ரம்பின் இந்த செயலால் உலக நாடுகளிலேயே வர்த்தகப் போர் மிகத் தீவிரமடைந்து வருவது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.