Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுரையில் தைப்பூச தெப்பத் திருவிழாவிற்க்காக போக்குவரத்து மாற்றம்

மதுரையில் தைப்பூச தெப்பத் திருவிழாவிற்க்காக போக்குவரத்து மாற்றம்

மதுரையில் தைப்பூச தெப்பத் திருவிழாவிற்க்காக போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கீழ்க்கண்ட பகுதிகளில் கூறியுள்ளவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

1) அண்ணாநகர், வைகை வடகரை சாலை, PT.R பாலம் வழியாக தெப்பகுளம் செல்ல எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி கிடையாது

2) தெப்ப திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் பக்கதர்களின் வசதிக்காக தெப்பகுளம் 16 – கால் மண்டபம் அருகே பேருந்துகள் வந்து செல்வதற்காக தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது

3) விரகனூர் ரிங்ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் சாலை தெப்பதிருவிழாவை காணவரும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை தென்கரை சாலை மற்றும் பழைய ராம்நாட் சோதனைச்சாவடி மற்றும் வைகை தென்கரை கொள்ள நிறுத்திக் வசதி செய்யப்பட்டுள்ளது

4) விரகனூர் ரிங்ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் சாலை வழியாக நகருக்குள் வரும் அரசு பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் வைகை தென்கரை சாலை வழியாக குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்பு சென்று நகரின் எந்த இடத்திற்கும் செல்லலாம்

5) பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து முனிச்சாலை ரோடு, விரகனூர் சாலை வழியாக விரகனூர் ரிங்ரோடு செல்லக்கூடிய அரசு பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கணேஷ் தியேட்டர் சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்பு சென்று தென்கரை சாலை வழியாக ரிங்ரோடு செல்ல வேண்டும்

6) பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து முனிச்சாலை ரோடு , தெப்பகுளம் வழியாக அனுப்பானடி செல்லக்கூடிய அரசு பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் முனிச்சாலை சந்திப்பு பழைய ராமநாதபுரம் ரோடு வழியாக கேட்லாக் ரோடு சென்று அனுப்பானடி செல்ல வேண்டும்

Exit mobile version