Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!?

Traffic officials who snatched the Arun button from all the buses in Erode district!?

Traffic officials who snatched the Arun button from all the buses in Erode district!?

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!?

ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் பேருந்து,அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளில்  உள்ள அதிக ஒலி ஏற்படுத்த கூடிய காற்று ஒலிப்பான்கள் தடையை மீறி பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.

ஈரோட்டில் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தி சாலையில் செல்லும் அனைவரையும் நடுங்கச் செய்கின்றார்கள்.விடாமல் அடித்து வரும் மினி பேருந்துகளினால் சாலையில் செல்லும் பெரியோர்கள் மற்றும் குழந்தைகள் பயந்து போய் சாலையிலேயே திடிரென்று தள்ளாடி விழுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு சில காயங்களும் ஏற்பட்டுள்ளது.எனவே இவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படி ஈரோடு சரக போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் சுரேந்திர குமார்,சிவகுமார்,மாசுக்கட்டுப்பட்டு வாரியத்தின் விஞ்ஞான அலுவலர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் ஈரோடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த தொடர் ஆய்வின் போது இருபது பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பங்கள் அகற்றப்பட்டன.இந்த சம்பவத்தால்  ஈரோடு பேருந்து நிலையத்தில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version