என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

0
140

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நானே பாத் என்ற பகுதியில் பூனேவில் நடைபெற்றுள்ளது.

 

பூனேவில் நானே பாத் என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கை உரிமையாளருடன் சேர்த்து போக்குவரத்து துறையினர் இழுத்து சென்ற சம்பவம் தான் அங்கு நடைபெற்றுள்ளது. இதைப் பற்றிய புகைப்படம் வியாழக்கிழமை வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வண்டிகள் பார்க் செய்யும் இடத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தை பார்க் செய்ததாகவும், பின் வண்டியை ஏற்றும் பொழுது வேண்டுமென்றே தானும் அமர்ந்து தாகவும் சொல்லப்படுகிறது.

அந்த சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியான பிறகு போக்குவரத்து துறையின் மீது மக்களுக்கு ஒரு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் அதில் பைக்கின் உரிமையாளர் கூறியது, நான் நோ பார்க்கிங் இடத்தில் வண்டியை நிறுத்த வில்லை. நான் சாலையின் ஓரமாக இரண்டு நிமிடம் நின்று கொண்டி இருந்தேன், நான் காரை பார்க் செய்யவில்லை. நான் உடனே கிளம்பி விடுகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என்று அவர் சொல்லியுள்ளார்.ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறை பைக்குடன் சேர்த்து பைக் உரிமையாளரையும் காற்றில் தொங்கவிட்டபடி அழைத்துச் சென்றுள்ளனர்.

 

அந்த நபர் பலமுறை பைக்கை நோ பார்க்கிங்கில் நிறுத்தவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியான பிறகு, அது அந்த இளைஞரின் தவறாக இருந்தாலும் அவரை இந்த முறையில் பைக்குடன் அழைத்துச் செல்வது சரியா என்ற கேள்வியை மக்கள் இப்போது கேட்டு உள்ளனர். அவர் விழுந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு? என போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது மக்கள் ஒரு அதிருப்தியை காட்டி வருகின்றனர் என்று கூறுகின்றனர்.