Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!

#image_title

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!

அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த கே.பி.அன்பழகன் அவர்களது வீட்டில் துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது.

கே.பி.அன்பழகன் அவர்களுக்கு சசி மோகன்(32) என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பூர்ணிமா(30) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருக்கின்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கணவருடன் வசித்து வந்த பூர்ணிமா அவர்கள் கடந்த ஜனவரி 18(வியாழன்) அன்று வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்து இருக்கிறார்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக பூர்ணிமாவின் உடை.. அருகில் இருந்த விளக்கின் தீயில் பட்டு மளமளவென எரியத் தொடங்கியது. உடையில் தீ பிடித்ததை கண்டு அலறிய பூர்ணிமாவை வீட்டில் இருந்தவர்கள் காப்பற்றி பாலக்கோட்டில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

40% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கே.பி.அன்பழகன் அவர்களின் வீட்டில் நடந்த இந்த துயர நிகழ்வால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Exit mobile version