ஜெர்மனியில் தடுப்பூசி போட வந்த இடத்தில் மிகப் பெரிய விபரீதம் ஒன்று நடந்துள்ளது. அதில் ஐந்து பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.
அனைத்து உலக நாடுகளிலும் கொரோணா பரவுவதை தடுப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசி போடும் மையத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால் 5 பேர் காயமடைந்துள்ளதாக ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் டுபிங்கன் நகரத்திலுள்ள தடுப்பூசி போடும் மையத்தில்தான் கடும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அப்போது டென்னிஸ் பந்து அளவில் ஆலங்கட்டிகள் வந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆலங்கட்டி மழை பெய்ததால் 5 பேர் படுகாயம் அடைந்ததாக காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்த தடுப்பூசி மையத்தில் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வெள்ள நீர் புகுந்த இடங்களில் இருந்து நீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
மேலும் இந்த ஆலங்கட்டி மழைகளால் மாபெரும் மரங்கள் விழுந்ததாகவும் அதனை அகற்றும் பணிகளில் தீவிர முயற்சியில் தீயணைப்பு படையினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆலங்கட்டி மழையால் 2020 கால்பந்து போட்டியும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.