நிலஉரிமையாளர்களுக்குப் பேரதிர்ச்சி! புலம் நில அளவை மற்றும் வரை படங்களுக்கான அளவீட்டுக் கட்டணம் 66 மடங்கு உயர்வு!

0
179
Tragedy for landholders! Measurement fee for lands, field, land size and up pictures increased 66 times!

கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் மற்றும் நில அளவைகள், புலப்பட நகல்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்களை தமிழக அரசு பல மடங்குகள் உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள், நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவீடு செய்து, உட்பிரிவு மற்றும் எல்லைகளை நிர்ணயிப்பது போன்ற அளவீடுகள் திருத்தம் செய்யவும், நிலத்தை மேல்முறையீடு செய்து மறு அளவீடு செய்வது போன்ற பல்வேறு பணிகளை வருவாய்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவைத்துறை கண்காணித்து பணி வருகிறது. இதில் ஒவ்வொரு பணிக்கும் தகுந்தாற்போல் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் கிராம வட்ட மற்றும் மாவட்ட வரைபடங்களும் நில அளவைத்துறை கணக்கீடு செய்து அதற்கான கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த கட்டணங்களை வருவாய்த்துறை உயர்த்த முடிவு எடுத்துள்ளது. முடிவின்படி, மத்திய நில அளவை மற்றும் அலுவலக இணை இயக்குனர் தலைமையில் தொழில்நுட்பக் குழு ஏற்பாடு செய்து கட்டணங்கள் வகுக்கப்பட்டன. இந்தக் குழு கட்டணங்களை உயர்த்தி அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணையின் விவரங்கள்:

அரசாணையின் படி, புலம் அளவீட்டுப் புத்தகம் பிரதி எடுக்க ஏ-4 அளவில் பக்கம் ஒன்றுக்கு ரூ.20லிருந்து பத்து மடங்கு உயர்த்தி ரூ.200 ஆகவும், அளவீட்டு கருவிகளைப் பயன்படுத்தி பக்க எல்லைகளை வகுக்க ரூ.30லிருந்து ரூ.300 ஆகவும், நில அளவரின் முடிவு ஏற்கப்படாத வகையில், மேல்முறையீடு செய்ய ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.50லிருந்து எட்டு மடங்காக உயர்த்தி ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

உட்பிரிவு மற்றும் பாகப்பிரிவு செய்வதற்கு முன், நில உரிமையாளருடைய விண்ணப்பத்தின் பேரில் எல்லைகளை நிர்ணயம் செய்து சுட்டிக் காட்டுவதற்கான கட்டணம், புன்செய் நிலத்திற்கு மட்டும் ரூ.30லிருந்து 33 மடங்கு உயர்த்தி ரூ.1000ஆகவும், நன்செய் நிலத்திற்கு ரூ.50லிருந்து 40 மடங்கு உயர்த்தி ரூ.2000 மாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Tragedy for landholders! Measurement fee for lands, field, land size and up pictures increased 66 times!
Tragedy for landholders! Measurement fee for lands, field, land size and up pictures increased 66 times!

மேல்முறையீடு செய்யும்போது மறு அளவீட்டிற்கான கட்டணம் புன்செய் நிலத்திற்கு ரூ.60 லிருந்து ரூ.4,000 ஆகவும், இது 66 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நில அளவு குறியீட்டில் காண முன்பணம் மற்றும் செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 சதவீதத்திலிருந்து 800 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரைபடங்கள்(Map) தயார் செய்வதில், வண்ண வரைபடம் ரூ.189 லிருந்து ரூ.500 ஆகவும், எல்லைக்கோடு ஏற்பாடு செய்வதற்கு ரூ.51 இல் இருந்து ரூ.300 ஆகவும், வட்ட வரைபடம் வண்ணத்தில் ஏற்பாடு செய்ய ரூ.357லிலிருந்து ரூ.1000 ஆகவும், வட்ட வரைபடம் எல்லைக்கோடு ரூ.51 இல் இருந்து ரூ.500 ஆகவும், நகரம் பிளாக் வரைபடம் ரூ.21 இல் இருந்து ஒரு டி.எஸ் எண்ணுக்கு ரூ.50 என்றும், கிராம வரைபடத்திற்கு ரூ.85 லிருந்து ரூ.200 ஆகவும், உட்பிரிவு கட்டணம் கிராமப்புறத்தில் ரூ.40 இல் இருந்து ரூ.400 ஆகவும், நகராட்சிகளில் ரூ.50லிருந்து ரூ.500 ஆகவும், அதே மாநகராட்சியில் ரூ.60லிருந்து ரூ.500 ஆகவும் என இதில் 10 மடங்கிற்கு மேல் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டணங்கள் முதலில் 1987ஆம் ஆண்டு பழைய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த 2002ஆம் ஆண்டு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டது 60 மடங்கிற்கும் மேல் உள்ளது.

தற்போது திருத்தம் செய்யப்பட்ட கட்டணம் உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக வருவாய்த்துறை செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி கட்டண உயர்வு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் அலுவலகங்களில் உள்ள மென்பொருளில் கட்டண உயர்வு மாற்றம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நடவடிக்கை எடுக்குமாறு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இந்த முடிவானது கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரமும் சீரழிந்த நிலையில், இக்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.