Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!

கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் நாகூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்துள்ளார்.இந்தப் பெண்ணிற்கு அதர்ஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அறிமுகமான ஒரே மாதத்திற்குள் இருவரும் நட்பாகி தொலைபேசியில் நெருக்குமாகினர்.பிறகு இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்து,பின்பு அதர்ஷ் -யை சந்திக்க அப்பெண் பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனஹள்ளிகு பேருந்தின் மூலம் சென்றுள்ளார்.

பின்பு தேவனஹள்ளிலிருந்து,
அதர்ஷ்வுடன், அப்பெண் பைக்கில் சென்றுள்ளார்.
இருவரும் அவரின் பண்ணை வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பபடுவதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் நட்பாகத்தான் பழகுகிறேன் என்று கூறியுள்ளார்.இளைஞர் எவ்வளவு வற்புறுத்தியும் அப்பெண் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர் அந்தப் பெண்ணை,அங்கிருந்த கிணற்றுக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இரவு நேரம் என்பதால்,
கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்ட அந்த இளம் பெண்ணின் அலறல்சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.அவர் கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மூன்று நாட்களுக்கு பின்பே கிணற்றிலிருந்து அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் கிணற்றுக்குள் பார்த்துள்ளனர்.

பின்பு கிராமமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து வந்து கிரேன் உதவியுடன் அப்பெண்ணை கிணற்றிலிருந்து மீட்டெடுத்தனர். பிறகு அவரது சிகிச்சைக்காக அப்பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர்
அதர்ஷ் -யை கைது செய்துள்ளனர்.

Exit mobile version