Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வறுமை காரணமாக வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! தமிழர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் அன்புமணி

Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil

Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil

வறுமை காரணமாக வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! தமிழர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் அன்புமணி

வறுமை காரணமாக கேரளாவிற்கு வேலைக்கு சென்ற பெண் அங்குள்ள போலி சாமியாரால் நரபலி கொடுக்கப்பட்டு கொல்லபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அனுதாபம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேலும் இது போன்று நடக்காமல் தடுக்க தமிழக அரசு மற்றும் கேரளா அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தறிவு அதிகம் பெற்ற கேரளத்தில் தான் நரபலி போன்ற மூடநம்பிக்கைகளும், கொடூரங்களும் அதிகமாக நிலவுகின்றன. எந்த பின்புலமும் இல்லாமல் கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும்!

தருமபுரி மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பு இல்லாதது தான் மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முதன்மை காரணம். தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கொல்லப்பட்ட பத்மாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

https://twitter.com/draramadoss/status/1580137388453801984

Exit mobile version