Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Tragedy happened to the family who was going to the temple! Car and bus collide head-on accident

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் குடுபத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு காரில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரானது பண்ணைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்து கொண்டிருந்த காரின் முன்பக்க சக்கரம் திடீரென வெடித்தது. அந்நிலையில் கார் நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.அந்த விபத்தில்  காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அபிஜித்தின் இரண்டு வயது குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Exit mobile version