Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சோமாலியாயில் சோகம்

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு  மனித நேய ஆர்வலராக வலம் வந்தவர் டாக்டர் ஹாவா அப்தி (வயது 73). இவர் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.  உள்நாட்டுப் போரால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கினார். 2011-ல் அவரது ஆஸ்பத்திரி, மத அடிப்படையிலான பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.

ஆனால் நூற்றுக்கணக்கான உள்ளூர் பெண்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பின்வாங்கினர். ஹாவா அப்தி, சோமாலியாவின் அன்னை. அவர் பாதிக்கப்பட்ட சோமாலியா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச ஆஸ்பத்திரியை நிறுவி சேவை செய்தார் மொகாதிசுவில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

Exit mobile version