Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயில் பெட்டிகள் குத்தகை : இந்திய ரயில்வே திட்டம்!

ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகை விடவும் அவற்றை விற்பனை செய்யவும் இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

உலகின் குறிப்பிடத்தகுந்த மிகப்பெரிய பொது அமைப்பான இந்திய ரயில்வே அமைப்பு தற்போது சிறிது சிறிதாக தனியாரின் கைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஏற்கனவே சுற்றுலாத்துறையினருடன் இணைந்து சில ரயில்களில் தனியார் அமைப்புகள் செயல்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலாவின் பெயரால் ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்கவும் இந்திய ரயில்வே திட்டமிட்டு, அதற்கான கொள்கை வகுத்துவருகிறது. இதுவரை தனியார்துறையினர் ரயில்களை இயக்க பெரிதளவில் ஆர்வம் காட்டாத நிலையில் இந்திய அரசு நமது நாட்டில் தனியார் துறையினரும் ரெயில்களை விரும்புகிறது.

இந்த நிலையில் கலாசாரம், மதம் மற்றும் இன்ன பிற சுற்றுலா வகைக்கு ரெயில்களை தனியார் துறையினர் இயக்க ரெயில்வே துறை அதிரடியாக திட்டமிட்டுள்ளது.இதற்காக தனியார் துறையினருக்கு ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்பனை செய்யவும் பரிசீலிக்கப்படுகிறது.

இதுதொடர்பான கொள்கையையும், திட்டத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முடிவு செய்வதற்கு செயல் இயக்குனர் அளவிலான உயர்மட்டக்குழுவை ரெயில்வே அமைத்துள்ளது. இதை ரெயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தின்கீழ் செயல்பட விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 16 ரெயில்பெட்டிகளை வாங்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ வேண்டும் என்று கூறப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு அல்லது விலைக்கு வாங்குகிறவர்கள் பயண வழிகள், பயணத்திட்டம், கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடுத்தர மக்களும், ஏழைகளும் பெரிதும் சிரமத்துக்குள்ளாவர் என்று நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version