Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2 மாதங்களுக்கு பின்னர் தொடங்கப்பட்ட ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் இருக்கின்ற தூக்குப்பாலம் வழியே ரயில்கள் செல்லும் சமயத்தில் ஏதாவது அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக ஐடி மூலமாக சென்ற சில வருடங்களுக்கு முன்னர் சென்சார் கருவிகள் தூக்குப் பாலத்தை சுற்றி என்பதற்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையில் சென்ற ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து செல்லும் சமயத்தில் தூக்கு பாலத்தில் அதிர்வுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சென்ற இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக, ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வழியாக மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

அதோடு தூக்கு பாலத்தின் உறுதியான தன்மையை மேம்படுத்தும் பணி சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்தது இந்த பணிகள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் சென்ற ஒரு வார காலமாக பாம்பன் தூக்கு பாலம் வழியாக பயணிகள் இல்லாமல் காலி பெட்டிகள் மற்றும் தனி இன்ஜினும் பலமுறை இயக்கப்பட்டு தூக்கு பாலத்தில் பலத்தை ஆய்வு செய்தார்கள்.

இதில் தூக்கு பாலத்தின் உறுதியான தன்மையை சரியாக இருப்பதாக ஐஐடி கொடுத்த ஆய்வறிக்கையை அடுத்து பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்க தெற்கு ரயில்வே துறை அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், 60 நாட்களுக்கு பின்னர் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் மூலமாக மீண்டும் பயணிகளுடன் வழியில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் 4:30 மணி அளவில் பயணிகளுடன் பாம்பன் ரயில் பாலம் மற்றும் தூக்கு பாலத்தை கடந்து ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்தடைந்தது.

அதேபோல சென்னையில் இருந்து காலை ஏழு முப்பது மணி அளவில் வந்த விரைவு ரயில் திருச்சியில் இருந்து பயணிகள் ரயில் பகல் 11 30 மணியளவில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்றது, 2:30 மணியளவில்திருச்சி பயணிகள் ரயில் மாலை 6. 10 மணி அளவில் சென்னை விரைவு ரயில், இரவு சேது எக்ஸ்பிரஸ் ரயிலும் வழக்கம்போல ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றிருக்கின்றன.

அறுபத்தி எட்டு நாட்களுக்கு பின்னர் மறுபடியும் பாம்பன் ரயில் பாலம் மூலமாக பயணிகள் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. பாலம் வழியாக வந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகள் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கடல் அழகையும், ரோடு பாலத்தையும், கண்டு ரசித்தபடி பயணம் செய்தார்கள்.

அதேபோல கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், உதகை மலை ரயில் சேவை நான்கு மாதங்களுக்குப் பின்னர் மறுபடியும் ஆரம்பமானது. 7:10 அளவில் புறப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார்கள்.

Exit mobile version