ரயில் பயணிகளே.. இதை செய்தால் டிக்கெட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது!!
இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.அதில் ஒன்று தான் ATVM இயந்திரம்.இவை ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் இயந்திரம் ஆகும்.இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு டிக்கெட் விலை குறைவு,பயண நேரம் குறைவு மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த அத்தனை அம்சங்கள் ரயில் போக்குவரத்தில் இருந்தாலும் டிக்கெட் எடுப்பது மட்டும் பெரும் போராட்டமாக இருக்கிறது என்பது ரயில் பயணிகளின் ஆதங்கம்.
டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் க்யூவில் நிற்கும் நிலை ஏற்படுவதால் உரிய நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடிவதில்லை என்பது ரயில் பயணிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.இந்த நிலை மாற பயணிகள் கால் கடுக்க நிறக்காமல் சுலமபாக முறையில் டிக்கெட் பெற்று பயணம் மேற்கொள்ள ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தி இருக்கும் சேவை தான் ATVM இயந்திரம்.
இந்த தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் பெறுவது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள்.லோக்கல் ட்ரெய்ன் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இந்த ATVM இயந்திரம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
ATVM இயந்திரம் பயன்படுத்தி டிக்கெட் பெறும் முறை:
ATVM இயந்திரத்தில் உள்ள Using Map Option இருக்கும் அதை கிளிக் செய்யவும்.இல்லையென்றால் all other station இருந்தால் தேர்வு செய்யவும்.
பிறகு நீங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனை conform செய்ய வேண்டும்.
அதன் பின்னர் உங்களுடன் எத்தனை நபர்கள் பயணிக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் Superfast அல்லது Local Train ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்.
அடுத்து Pay ஆப்ஷனை கிளிக் செய்து QR Pay மூலம் உரிய பணத்தை கட்டி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.ATVM இயந்திர சேவையால் ரயில் டிக்கெட் எடுப்பது மிகவும் சுலமாகி இருக்கிறது.