ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்!

0
200
Train passengers suffer due to empty tickets for trains! Pre-register today!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் நாள் அன்று வருகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியூரில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் ரயில்களில் பயணம் மேற்கொள்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்களில் மற்றும் ஐஆர்சிடிசி(Indian Railway Catering and Tourism Corporation) என்ற இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை அன்று வருகிறது. இதனால் சொந்த ஊருக்கு வரும் பயணிகள் அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். அக்டோபர் 21ஆம் தேதி அன்று டிக்கெட் முன்பதிவு  தொடங்குகிறது.

எனவே அக்டோபர் 22-ஆம் தேதி பயணம் செய்பவர்கள்  24ஆம் தேதி ,மற்றும் அக்டோபர் 23ஆம் தேதி பயணம் செய்ய வரும் பயணிகளும்25 ஆம் தேதியும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகைகளுக்கு  இயக்கப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே ரயில் டிக்கெட்டுகள் தீர்ந்து விடுவது வழக்கமாகும்.

எனவே தீபாவளி பண்டிகையின்போது சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகள் அனைவரும் ரயில் கால அட்டவணையின் படி திட்டமிட்டு  ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பயணிகள் அனைவரும் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..