Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயில் சேவை அதிரடியாக ரத்து! பயணிகள் கடும் அவதி!

Train service has been canceled! Passengers suffer!

Train service has been canceled! Passengers suffer!

ரயில் சேவை அதிரடியாக ரத்து! பயணிகள் கடும் அவதி!

தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் சென்னை-கோவை செல்லும் ரயில் சேவை பராமரிப்புப் பணி நடைபெறுகின்றது,அதன் காரணமாக வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதிகளில் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு செல்லும் வண்டி எண் 12675 என்ற கோவை விரைவு ரயில் ஜனவரி 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் காலை 7.10 மணிக்கு செல்லும் சதாப்திவிரைவு ரயில் வண்டி எண் 12243 ஜனவரி 4 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது.

மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு  மாலை 3.15 மணிக்கு செல்லும் வண்டி எண் 12676 கோவை விரைவு ரயில் ஜனவரி 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றது.மேலும் மாலை 3.05 மணிக்கு செல்லும் சதாப்தி விரைவு ரயில் வண்டி எண் 12244 ஜனவரி 4 ஆம் தேதி முழுவதுமாகவே ரத்து செய்யப்படுகின்றது.

சேலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு  மாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயில் டிசம்பர் 26,27 ஆம் தேதிகளிலும்,ஜனவரி 3,4 ஆம் தேதிகளிலும் காட்பாடி வரை இயக்கப்படும்.காட்பாடி முதல் அரக்கோணம் வரை ரத்து செய்யப்படுகிறது.மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து சேலத்திற்கு காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் டிசம்பர் 27,28 மற்றும் ஜனவரி 4,5 ஆம் தேதிகளில் காட்பாடியில் இருந்து புறப்படும்.அரக்கோணம் முதல் காட்பாடி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

உத்தர பிரதேசம் முதல் கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் ராப்திசாகர் வாராந்திர விரைவு ரயில் வண்டி எண் 12511 ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல், எழும்பூர், விழுப்புரம், காட்பாடி வழியாக இயக்கப்படும்.ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் முதல் கேரள மாநிலம் ஆழப்புழா செல்லும் விரைவு ரயில் வண்டி எண் 13351 டிசம்பர் 25 ஆம் தேதி சென்னை சென்ட்ரல், எழும்பூர், விழுப்புரம், காட்பாடி வழியாக இயக்கப்படுகின்றது.மேலும் திருவள்ளூர், அரக்கோணம் ரயில் நிலையங்களில் நிற்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version