Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!

#image_title

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பச் சொல்லும் பயணிகள் தங்களது இரயில் டிக்கெட்டுகளை இன்று(செப்டம்பர்13) முதல்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  தற்பொழுது இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி, புத்தாண்டு, போங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னையில் தங்கி இருந்து வேலை செய்யும் பல லட்சக் கணக்கான மக்கள்  சொந்த ஊர்களுக்கு திரும்பச் செல்வார்கள்.

லட்சக் கணக்கான மக்கள் திரும்பச் செல்லும்போது பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். அப்பொழுது கூட்ட நெரிசல் ஏற்படும். இந்த கூட்ட நெரிசலை குறைப்பதற்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளும், சிறப்பு இரயில்களும் அதிகமாக இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

அதே போல தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பச் செல்ல 120 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கி விடும். இந்நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி ஞாயிற்றுக் கிழமை போகிப் பண்டிகையும், ஜனவரி 15ம் தேதி திங்கள் கிழமை பொங்கல் பண்டிகையும், ஜனவரி 16ம் தேதி செவ்வாய்க் கிழமை மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17ம் தேதி புதன் கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு  பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பாக அதாவது இன்று(செப்டம்பர்13) முதல் தெடங்கியுள்ளது.

அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் நபர்கள் அதாவது ஜனவரி 11ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் நபர்கள் இன்று(செப்டம்பர் 13) இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனவரி 12ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் நபர்கள் நாளை(செப்டம்பர்14) டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஜனவரி 13ம் தேதி பயணம் செய்ய விரும்பும் நபர்கள் செப்டம்பர் 15ம் தேதியும், ஜனவரி 14ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 16ம் தேதியும் இரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயணிகள் அனைவரும் இரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் இரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version