ட்ரெயின் டிக்கெட்டை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! தவறாமல் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

0
147
Train ticket can be changed like this!! Be sure to know this!!

ட்ரெயின் டிக்கெட்டை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! தவறாமல் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

தமிழ்நாட்டில் உள்ள பெரியத் துறைகளில் ஒன்றுதான் ரயில்வே துறை. இதில் தினமும் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு, வேலைக்கு என்று லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.

மக்களின் போக்குவரத்து வசதிக்காக இந்திய ரயில்வே பல சலுகைகளையும், விதிகளையும் கொண்டு வருகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் விதிகளில் சில மாற்றங்களையும் செய்கிறது.
அந்த வகையில் தற்போது டிக்கெட் மாற்றும் விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒருவர் ரயில் டிக்கெட் எடுத்த பின்னர் அவரால் ஏதோ ஒரு சூழ்நிலையில் வர முடியாமல் போய்விட்டால் அவர் அந்த டிக்கெட் –ஐ தனது குடும்ப உறுப்பினருக்கு மாற்றி விடுவதற்கான புதிய விதிமுறையை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது.

இதனால் டிக்கெட் – ஐ கேன்செல் செய்து புதிய டிக்கெட் பெறுவதற்கான செலவு இனி ஏற்படாது. டிக்கெட் உரிமையாளரின் குடும்பம் என்றால் அதில் தாய், தந்தையர், சகோதரர், சகோதரி, மகள், மகன், கணவன் அல்லது மனைவி ஆகியோர் சேர்வர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவருக்கு மட்டுமே இந்த டிக்கெட்டை மாற்றிக்கொள்ள முடியும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் இந்த டிக்கெட் மாற்றும் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆப்லைனில் டிக்கெட் வாங்கி இருந்தால் அதை வைத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து இருந்தால் அதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் டிக்கெட் யாரிடம் மாற்ற வேண்டுமோ அவரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு ரயில் நிலையத்திற்கு சென்று அங்கே உள்ள முன் பதிவு கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.