இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!
தற்போது பேருந்துகளில் பயணிப்பதை விட ரயிலில் பயணிப்பதால் சுலபமானது எனவும் அதிக அளவில் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். மேலும் சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 13ஆம் தேதி வரை 21 நாட்கள் சேலம் ஈரோடு கரூர் வழியாக செல்லக்கூடிய 14 ரயில்களும் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சேலம், நாமக்கல், கரூர் வழியாக செல்லும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் ஈரோட்டில்லிருந்து ஜோலார்பேட்டையில்லிருந்து தினசரி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் வண்டி எண் (06846) அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை 22 நாட்களும் ரத்து செய்யப்படுகிறது எனவும் சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜோலார்பேட்டையில்லிருந்து ஈரோடு தினசரி முன்பதிவிலா சிறப்பு ரயில்கள் நாளை முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரையிலும் ஈரோட்டில்லிருந்து மேட்டூர் டேம் செல்லும் தினசரி முன்பதிவு சிறப்பு ரயில்கள் மற்றும் மேட்டூர் டேமில்லிருந்து ஈரோடுக்கு செல்லும் தினசரி முன்பதா ரயில்கள் ஆகிய ரயில்கள் நாளை முதல் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ரயில் சேவையில் செய்யப்பட்ட மாற்றங்களை குறித்து முன்பதிவு செய்தவர்களின் செல்போன் இன்னுக்கும் சேவைகளை குறித்து தகவல் அனுப்பப்படும் எனவும் சேலம் ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ரயில் நிலையங்களில் உதவி எண்கள் கொடுக்கப்படும் என்றும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.