Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு

இரண்டு மாதங்களுக்கு முன் உயிர் இழந்த ஒருவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் பிறப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு பதிலாக மாற்று பணியாளர் விரைவில் நியமிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கான டிரான்ஸ்பர் ஆர்டர் வெளிவந்தது. இதில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றி உயிரிழந்த முத்துக்குமாரின் பெயர் முதல் பெயராக இடம்பெற்று இருந்தது. அவர் சிவகாசியில் இருந்து அருப்புக்கோட்டை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து நகராட்சி அலுவலக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்துபோன ஒருவருக்கு டிரன்ஸ்ஃபர் ஆர்டர் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Exit mobile version