Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காலில் விழுந்து கெஞ்சிய டிக் டாக் திவ்யா! பொளந்த திருநங்கைகள்! பெருகும் ஆதரவு!

கார்த்தி கார்த்தி என்று டிக்டாக்கில் கார்த்தி லவர் என்று பெயர் போன டிக் டாக் திவ்யாவை திருநங்கைகள் அடித்து உதைத்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

கார்த்தி மாமா ஐ லவ் யூ என்று யார் யாரை எல்லாம் கார்த்தி என்று எல்லாம் சொல்லி கார்த்தியை தேடி அலைகிறேன் என்று விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தார் திவ்யா. இவர் அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.

 

அடுத்தவர்களைப் பற்றி ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோக்களை வெளியிட்டு மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தார். பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று மக்கள் கேவலமாக பேசும் அளவிற்கு இவர் வீடியோக்கள் இருக்கும்.

 

சமீபத்தில் திருநங்கைகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார் திவ்யா. அதனால் திவ்யாவின் வீட்டிற்கே சென்று திருநங்கைகள் அவருக்கு பாடம் புகட்டி உள்ளனர்.

மோசமான வார்த்தைகளால் திருநங்கைகளை அவமானப்படுத்தும் வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை பார்த்து கொதித்தெழுந்த பத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் திவ்யா இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து அவர் இடத்திற்கே சென்று அவரை அடித்து உதைத்துள்ளனர்.

காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லி அனைவர் காலிலும் விழுந்து திவ்யா மன்னிப்பு கேட்டுள்ளார். திவ்யாவிற்கு நல்ல பாடம் புகட்டியுள்ளார்கள் என நெட்டிசன்கள் திருநங்கைகளை பாராட்டி வருகின்றனர்.

 

அந்த வீடியோவில் நான் எதைப் பற்றியும் கூறவில்லை என்று அவர் பொய் சொல்ல ஆதாரத்திற்கு வீடியோவை காண்பித்து திருநங்கைகள் திட்டியுள்ளனர். என்னை காப்பாற்றி விடுங்கள் என்று அவரிடம் டிக் டாக் திவ்யா கதறுகிறார்.

 

இதோ அந்த வீடியோ உங்களுக்காக

https://youtu.be/PxFczx6Ac8s

Exit mobile version