Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!

#image_title

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்! 

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்.பூ போட்டு ஆசீர்வாதம் செய்தது போக ராமநாதபுரத்தில் பணத்தை தூவி ஆசீர்வாதம் செய்த திருநங்கைகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

பாரம்பரியமாக தமிழகத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளான திருமணம், பூப்புனித நீராட்டு விழா,காதணி விழா உள்ளிட்ட விழாக்களில் மணமக்கள் மற்றும் குழந்தைகளை மலர்தூவி ஆசீர்வாதம் செய்வது காலந் தொட்டு பாரம்பரியமிக்க விழாவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று திருநங்கைகளான சிவன்யா, பைரோஸ், விசித்ரா ஆகிய மூன்று திருநங்கைகளுக்கு தனியார் மண்டபம் ஒன்றில் மாவட்டத் தலைவி மும்தாஜ் தலைமையில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின்போது ஒருவருக்கொருவர் தங்கள் கைகளில் பணக்கட்டுகளை வைத்துக்கொண்டு சிதறி விட்டு ஆசீர்வாதம் செய்தும் குத்து டான்ஸ் போட்டும் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலர்களால் ஆசிர்வாதம் செய்து போக பணத்தால் ஆசீர்வாதம் செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பல்வேறு வகைகளில் பேசு பொருளாக விளங்கக்கூடிய திருநங்கைகள் மத்தியில் இப்படியும் நடந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version