Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு!!

#image_title

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு!
இனி வரும் தேர்தல்களில் திருநங்கைகளுக்கு தேர்தலில் நின்று போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அவர்களும் தேர்தலில் நின்று போட்டியிட்டு எம்.பி, எம்.எல்.ஏ ஆகலாம் என்று சமீபத்திய பேட்டியில் அறிவித்துள்ளார்.
திருநங்கைகள் என்று அழைக்கப்படும் திருநர்கள் இப்போது எல்லா துறைகளிலும் சாதிக்கத் தொடங்கி விட்டனர். காவல்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என எல்லா துறைகளிலும் திருநர்கள் இருக்கின்றனர். இதையடுத்து தேர்தலில் திருநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அமைச்சர் உதய்நிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் உதய்நிதி அவர்கள் “எதிர்வரும் காலங்களில் திமுக கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். சட்டமன்றத்தில் திருநங்கைகளுக்கான நலத்திட்டங்கள் பற்றிதான் என்னுடைய முதல் பேச்சு இருந்தது. திருநங்கைகளின் குறைகளை கேட்க எனது அலுவலகம் 24 மணிநேரமும் திறந்திருக்கும். திமுக கட்சி சார்பாக திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆகவும் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
Exit mobile version