நாடு முழுவதும் பொது முடக்கம் அழிக்கப்பட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. கொரோனாவின் தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பேருந்து மற்றும் ரயில் சேவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இ பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்க பட்டிருந்தாலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ROAD TAX ரத்து செய்தல் போன்ற சில கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர். இதனால் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கவில்லை.
அரசு விரைவு பேருந்துகளை மட்டுமே மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசு பேருந்து ஊழியர்கள் ஊழியர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
பல்லவன் இல்லத்தில் நடந்த ஓட்டுநர்கள் சங்கம் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் “தமிழ்நாட்டில் தற்போது பேருந்துகளின் இயக்கம் குறைவாகவே உள்ளது.மேலும் ஓடாத பேருந்துகளுக்கான பணியாளர்களுக்கு சொந்த விடுப்பு வழங்கப்பட்டு சம்பளமும் பிடிக்கப்படுகிறது. ஊழியர்களுக்கான ஓய்வூதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் இன்னும் பேச்சுவார்த்தை துவங்கப்படவில்லை.
ஓய்வூதியர்களுக்கு நிறுவ நிறைய நிலுவைகள் உள்ளன இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி அனைத்து பணிமனைகளில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.
இந்த போராட்டத்தை குறித்து அரசு ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.