Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலும் ஒரு நடிகர் பெரும் சோகத்தில் திரையுலகம்!

நோய் தொற்றின் இரண்டாவது அலை முதல் அலையை விடவும் மிகவும் மோசமாக இருக்கிறது. முதல் அலையின் சமயத்தில் உயிர் இழப்பு மிக குறைவாகவே இருந்தது. ஆனால் தற்சமயம் நாளொன்றுக்கு 300க்கும் அதிகமானோர் இதனால் பலியாகிறார்கள். இந்த தொற்றுக்கு சக்தி மிக அதிகமாக இருப்பதால் மூச்சுத் திணறல் உண்டாகி உயிரழப்பு ஏற்ப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் பிரமுகர்களும், திரைத்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்களும், அடுத்தடுத்து பலியாகிவருகிறார்கள். நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் , சின்னத்திரை நடிகர் நடிகர் பாண்டு, பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இயக்குனர் கே வி ஆனந்த் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன், போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் நிதீஷ் வீரா நோய் தொற்று காரணமாக, இன்று காலை உயிரிழந்திருக்கிறார். இப்படியான சூழலில் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தயாரிப்பாளர் டி சிவா தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதவியில் அவர் தெரிவித்திருப்பதாவது என்னுடைய 36 வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீண்டு வருவதற்கு எல்லோரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

Exit mobile version