Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை அதிகம் உபயோகித்தால் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து மாரடைப்பு வரும் என்ற தவறான செய்திகள் பரவியிருக்கிறது.

ஆம்! தேங்காயில் கொழுப்பு உள்ளது தான். எப்பொழுது, சமைக்கும் பொழுது மட்டும் தான் அதனுடைய சக்தி கொழுப்பாக மாறி விடுகிறது.

தேங்காய் தாய்ப்பாலுக்கு ஈடான ஒரு அமிர்தம் ஆகும்.

தேங்காய்க்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.அது என்னவென்றால் நாம் பத்து மாதம் கருவில் இருந்து வெளிவருகிறோம். அதே போல் தேங்காய் கருவாகி பூமிக்கு வர பத்து மாதம் ஆகும்.

தேங்காயை உடைத்து அரை மணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டால் அது தான் அமிர்தம். சகலவிதமான நோய்களும் பறந்து போய்விடும்.

பச்சையாக சாப்பிட்டால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை ரத்தத்தில் இருந்து கரைக்கும் தன்மை கொண்டது தேங்காய்.

உடலை உரமாக்கி உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் புதிதாக இயங்கும்படி செய்துவிடும்.

தேங்காயை முடிந்த அளவு பச்சையாக உண்ணுங்கள்.

தேங்காயை குருமா வைத்து தான் சாப்பிடுவேன் என்றால் அது கெட்ட கொழுப்பாக மாறிவிடும்.

பச்சையாக சாப்பிட்டால் அது நல்ல கொழுப்பு.

தேங்காயைத் துருவி அதில் நாட்டுச் சர்க்கரையைப் போட்டு குழந்தைகளுக்கு உண்ண கொடுங்கள் அதை விட ஆரோக்கியம் வேறு எதுவும் இல்லை.

பழங்காலத்தில் ஒருவர் இறக்கும் தருவாயில் தேங்காய் பாலை ஊற்றினால் உயிர் வந்துவிடும். ஆனால் இன்று பாக்கெட் பால் ஊற்றி நாமே கொன்று விடுகிறோம்.

தாய்ப் பால் சரியாக வராத தாய்மார்களின் குழந்தைகளுக்கு முன் காலத்தில் தேங்காய்ப்பாலை கொடுத்துள்ளனர் குழந்தை நன்றாக வளரும். ஆனால் இன்று பாக்கெட் பால்.

காலையில் பாக்கெட்டுகளை வாங்கி வந்து உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டு, தேங்காயை அரைத்து அந்தப் பாலை எடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி, தேன் சேர்த்து அருந்தி வாருங்கள் அதைவிட அமிர்தத்தை நீங்கள் காணமுடியாது.

 

 

Exit mobile version