திருடனுக்கு வந்த சோதனை : திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருடன் !

0
173

திருடிய செல்போனை சரியாகப் பயன்படுத்தத் தெரியாததால் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருடன்.

மேற்கு வங்காளத்தில் கிழக்கு புர்த்வான் பகுதியை சேர்ந்த நபர் ,அப்பகுதியில் உள்ள இனிப்புக் கடைக்கு சென்ற பொழுது, அங்கே தவறுதலாக 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை தொலைத்துவிட்டார். வீடு திரும்பிய பின்னர் தன்னிடம் செல்போன் இல்லை என்பதை உணர்ந்த நபர், உடனடியாக அந்த இனிப்பு கடைக்குச் சென்று பார்த்த பொழுது அங்கே அவரது செல்போன் இல்லை.

உடனே அதிர்ச்சியடைந்த அந்த நபர், அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தொலைத்த அந்த நபர் வேறு எண்களில் இருந்து அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அந்த செல்போன் ஆப் செய்யப்பட்டு இருந்தது..செல்போனை இழந்த அந்த நபர் மீண்டும் அந்த செல்போன் கிடைக்காது என்று எண்ணிய நிலையில், இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் திருடியவர் உரிமையளரின் எண்ணிலிருந்து செல்போன் பற்றி பேசியுள்ளார்.

அப்போது செல்போன் திருடிய நபர், அந்த செல்போனை பயன்படுத்த தெரியவில்லை என்றும் மீண்டும் அதனை ஒப்படைக்கபோவதாகவும் கூறினார் .மேலும் ஒப்படைப்பதற்காக வீட்டு விலாசத்தையும் கேட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த அந்த நபர், செல்போன் திருடிய நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் செல்போனை மீண்டும் ஒப்படைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.