பழங்குடியின பெண் காலணியால் தாக்கிய சம்பவம்! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கண்டனம்

0
202
பழங்குடியின பெண் காலணியால் தாக்கிய சம்பவம்! காங்கிரஸ் செல்வபெருந்தொகை கண்டனம்
பழங்குடியின பெண் காலணியால் தாக்கிய சம்பவம்! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கண்டனம்
தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்கு தெரு பகுதியில் உள்ள பழங்குடியின பெண்கள் சிலர், அங்குள்ள பகுதியில் கிழே கிடந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை பொறுக்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், அந்த பெண்கள் வைத்திருந்த பைகளை பிடிங்கி அதனை கிழே கொட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி தான் அணிருந்த காலணியால் அப்பெண்களை கடுமையாக தாக்கினார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு சமூக நல அமைப்பினர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு ஆதரவாகவும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் பிரபல தனியார் செய்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பானவுடன். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தொகை தனது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
செல்வபெருந்தொகை வெளியிட்ட அறிக்கையில், தஞ்சாவூரில் சாலையில் கிடந்த பாட்டில்களை பழங்குடியினப் பெண்கள் எடுத்துக் கொண்டிருந்த போது குறிச்சி சீனிவாசன்புரம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் காலணியால் தாக்கியுள்ளார். பழங்குடியினப் பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உடனடியாக இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த நபர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும்.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கினால்தான், தொடர்ந்து இதுபோன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு அச்சம் ஏற்படும்.எனவே சமூகநீதி ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்கவேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். என செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.