Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பபு – மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியினர் மனு!!

#image_title

நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் செலவு செய்தால் தான் பள்ளிக்கு செல்ல முடியும் என்பதால் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் தங்கள் பிரச்சனைகள் தொடர்பாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் குறைகளை தெரிவித்தனர்.

மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் நாள் ஒன்றுக்கு படகுக்கு மட்டும் 40 ரூபாய் செலவு செய்ய வேண்டும் எனவும் பல நாட்கள் அவ்வாறு தனக்கு காசு இல்லாததால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் இதை சரி செய்திட அரசு செலவிலேயே இலவசமாக பழங்குடியின மக்களுக்காக படகு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா காலத்தில் ஏனைய மாணவர்கள் ஆன்லைன் கல்வி பகிர்ந்த போது பழங்குடியினமானவர்கள் ஆன்லைன் கல்வி பெற முடியவில்லை எனவும் தங்கள் பகுதிகளில் செல்போன் கோபுரம் இல்லாததால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் கல்வி பயில்வது உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதால் உடனடியாக செல்போன் டவர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், ஏராளமான வீடுகளில் கழிவறைகள் இல்லாததால் சிறுமிகள் இளம்பெண்கள் உள்ளிட்ட பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாவதாகவும் இரவு நேரங்களில் விலங்குகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் திறந்தவெளியில் செல்வது இயலாத நிலை உள்ளதால் பழங்குடியின மக்களின் வீடுகளில் கழிவறை கட்டித் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதை கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர் இந்த குறைகளை நிவர்த்தி செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Exit mobile version