Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி!

#image_title

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெண்கள் உறுதிமொழி செய்தனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. வழக்கறிஞர் ஹரி ராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த பொது மக்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது பெண்கள் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

Exit mobile version