Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!!

#image_title

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை!!

எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையும் வைத்து காவல் துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ் குமார், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, வீட்டு வசதி கழக டிஜிபி ஏகே விஸ்வநாதன், முன்னாள் டிஜிபி நடராஜ், ரமணி,கணபதி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1944 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ் எஸ் போர்ட் ஸ்டிக்கின்ஸ் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது. கிட்டத்தட்ட 1200 டன் வெடி பொருட்கள் மற்றும் எண்ணெய் அந்த கப்பலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக மும்பை தீயணைப்பு துறை சேர்ந்த வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கப்பல் வெடித்து சிதறியதில் 66 தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்தார்கள். அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக தீயணைப்பு துறை தொடங்கப்பட்டு 1953 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 33 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் கையில் கருப்பு பேண்டை அணிந்து தங்களுடைய மரியாதையை செலுத்தினர்

Exit mobile version