கடந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது. அதோடு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.
மேலும் சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுகவின் சார்பாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் முதல்முறையாக ஷாலினி ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் களமிறக்கப்பட்டு அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவர் வெற்றி பெற்றவுடன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கத் தொடங்கினார்கள். ஆனால் நிதானமாக யோசித்து ஸ்டாலின் அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவில்லை.
ஆனாலும் தொடர்ந்து அவர் ஆக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருவதாக சொல்லப்படுகிறது, அதோடு எப்படி கோரிக்கை எழுந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஸ்டாலினின் மறைமுக தூண்டுதலின் பெயரில் தான் என்றும் சில கருத்துக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னையில் கடந்த இருபத்தி 8ம் தேதி திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி உரையாற்றினார்.
கூட்டத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழாவை மிக சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவது என்றும், கழக நலப்பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டசபை உறுப்பினரும் மாநில இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சர் ஆகவேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என சொல்லப்படுகிறது.