Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்ற ஒருவர் வசித்து வருகிறார். மேலும், இவருக்கு கனிமொழி என்கிற ஒரு மனைவியும் இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார்.

இதனையடுத்து, கனிமொழி தன் குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்து உள்ளது. மேலும் இவர்களது ஆறு மாத குழந்தை தமிழினி என்ற பெண் தூங்கிக் கொண்டிருந்த தொட்டிலிலும் தீயானது பிடித்துவிட்டது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கனிமொழி உடனடியாக தன் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து விட்டார். அதன் பிறகு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கனிமொழி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். ஆனால், இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் கட்டில், பீரோ ஆகிய அனைத்தும் எரிந்து வீணாகிவிட்டது.

மேலும், அதிர்ஷ்டவசமாக இவரது குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் நேரவில்லை. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக சென்று தன் குழந்தைகளை தூக்கிக் கொண்டு சென்றதன் காரணமாக வீட்டில் உள்ள யாருக்கும் எதுவும் ஆகாமல், பொருட்கள் மட்டும் சேதம் அடைந்து உள்ளது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தது மட்டும் இல்லாமல் மிகவும் அச்சத்தில் இருந்தனர். அங்கு எவ்வாறு மின்கசிவு ஏற்பட்டிருக்கும் என்று அதனை யோசித்து வருகின்றனர்.

Exit mobile version