Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருச்சி கோயிலில் கிடைத்த தங்க புதையல்.!!

திருச்சி கோயிலில் கிடைத்த தங்க புதையல்.!!

திருச்சி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் தங்கப் புதையல் கிடைத்தது.

பஞ்சபூத ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸதலமாக ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயம் விளங்குகிறது. சிவன் வழிபாட்டிற்கு ஏற்ற மிக முக்கிய தளமாக இது அமைந்துள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வழிபாட்டிற்காக இங்கு வருகின்றனர்.

இந்நிலையில், கோயிலின் வெளிப்புறம் மற்றும் தோட்டங்களை அவ்வப்போது சுத்தம் செய்வது கோயில் நிர்வாகத்தின் வழக்கம். இந்த கோயிலின் உள்ள பிரசன்ன விநாயகர் சிலைக்கு பின்பு சுத்தப்படுத்தும் வேலை நடந்து கொண்டிருந்தது. கோயிலின் தேவைக்காக அங்கு சிறிய குழி ஒன்று தோண்டும்போது, திடீரென வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து, முழுமையாக தோண்டி எடுத்தபோது பழைய செப்பு உலோகத்தில் செய்யப்பட்ட உண்டி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3.8 கிராம் மற்றும் 3.5 கிராம் எடையில் உள்ள 504 தங்க காசுகள் இருந்தன. மேலும், 10 கிராம் எடை உள்ள தங்க நாணயமும் கிடைத்தது.

இந்த தங்க காசுகளின் மதிப்பு தற்போது 60 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இவை பழங்கால தங்க நாணயங்கள் என்பதால் இதன் மதிப்புகளை தொல்லியல் துறையினர்தான் மதிப்பிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த தங்கப் புதையல் செய்தியால் ஜம்புகேஸ்வரர் கோயில் மக்களை அதிகம் ஈர்த்துள்ளது எனலாம்.

Exit mobile version