Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாம் வாங்கக்கூடிய பழங்களில் செய்யக்கூடிய பித்தலாட்டங்கள்!! இது பழமா..இல்ல விஷமா!!

Tricks we can do with fruits we can buy!! Is it fruit..or poison!!

Tricks we can do with fruits we can buy!! Is it fruit..or poison!!

நாம் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெற வேண்டும் என்பதற்காக பல விதமான பழங்களை நாம் வாங்கி வருகிறோம். அந்த பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்போம். ஆனால் அத்தகைய பழங்களில் கலப்படம் செய்து வருகின்றனர். அதாவது பல கெமிக்கல்களை பயன்படுத்தி அந்த பழத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றனர். இதனை அறியாமல் நாம் உண்பதால் பலவிதமான பிரச்சனைகள் நமது உடல் நிலையில் ஏற்படுத்துகிறது. இயற்கையாக விளைந்த பழங்கள் எவை? செயற்கையாக மாற்றப்பட்ட பழங்கள் எவை? என்பது குறித்த விளக்கம் அளிக்கிறது உணவு பாதுகாப்பு துறை.
பழங்களை வியாபாரம் செய்பவர்கள் அதனை இரவு நேரங்களில் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்ற விழிப்புணர்வு தெரியாமல் அப்படியே போட்டு விடுகின்றனர். குறிப்பாக சாலையோர கடைகளில் தர்பூசணி போன்ற பழங்களை அப்படியே போட்டு விடுவதால் எலிகள் மற்றும் மற்ற ஜந்துக்கள் அந்த பழங்களில் ஏறி விடுகின்றன. அதிலும் சில பழங்களை எலிகள் துளையினை போட்டு சாப்பிட்டும் விடுகின்றன. அந்த பழத்தினை அப்படியே ஜூஸ் கடைகளில் பயன்படுத்துகின்றனர். எனவே இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்.
தர்பூசணி பழம்:
தர்பூசணி பழம் என்றாலே நாம் அதன் நிறத்தினை பார்த்து தான் வாங்குவோம். அதற்காகத்தான் அந்த நிறத்தை மாற்றி விடுகின்றனர் வியாபாரிகள். அதாவது ஒரு விதமான ஃபுட் கலரிங் கெமிக்கலை ஒரு ஊசியின் மூலம் தர்பூசணி பழத்தின் உள்ளே நுழைத்து விடுகின்றனர். இதனால் அந்த பழம் முழுவதும் அடர்ந்த சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது. அந்த நிறத்தினை பார்த்து நாமளும் நம்பி வாங்கி விடுகிறோம். ஆனால் எந்தெந்த பலத்திற்கு அந்த கெமிக்கலை போடுகிறார்களோ அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அந்த பழங்கள் விரைவில் அழுகிவிடும். எனவே அந்த பழத்தினை தான் மக்களுக்கு விரைவாக விற்று விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த பழத்தினை தேர்வு செய்து நம்மிடம் கொடுத்து விடுவார்கள்.
அதனை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது என்றால் தர்ப்பூசணி பழத்தினை அறுத்து அதன் மேல் ஒரு ஒயிட் டிஷ்யூவினை கொண்டு துடைத்து பார்த்தாலே அந்தக் கலர் ஒட்டிக் கொள்ளும். அவ்வாறு இருக்கக்கூடிய பழங்களை கண்டிப்பாக உண்ணக்கூடாது.
மாம்பழம்:
மாம்பழத்தினை கல் என்று சொல்லக்கூடிய ஒரு விதமான கெமிக்கலை வைத்து பழுக்க வைக்கின்றனர். அந்தக் கெமிக்கல் எத்திலின் கேஸ் ஐ வெளியிடும். அது வெளியிடக்கூடிய கேஸ் இன் வெப்பத்தினால் பழமானது விரைவில் பழுத்து விடும். ஒரு பழம் இயற்கையாக பழுக்க பத்து நாள் ஆகிறது என்றால், இந்த கெமிக்கலை பயன்படுத்தினால் மூன்று அல்லது ஐந்து மணி நேரத்திலேயே பழுக்க தொடங்கி விடும்.
இவ்வாறு பழுக்க கூடிய பழங்கள் எந்தவித மாம்பழத்தின் வாசனையையும் கொண்டிருக்காது இதனை வைத்தும் நாம் கண்டறியலாம். ஒரு பலமானது கீழ்ப்பகுதியில் இருந்து தான் பழுக்கத் தொடங்கும். எனவே காம்பு பகுதியில் கொஞ்சம் பச்சை நிறமாக இருந்தால் மட்டுமே அது இயற்கையாக பழுத்த பழம். அவ்வாறு இல்லாமல் ஒரு பழம் முழுவதும் காம்பு பகுதி வரையிலுமே மஞ்சள் நிறமாக உள்ளது என்றால் அது செயற்கையாக பழுக்க வைத்த பழம். அதேபோன்று செயற்கையாக பழுக்க வைத்த பழத்தினை தண்ணீரில் போட்டால் மேலே வந்து நிற்கும் அதாவது மிதக்கும்.
வாழைப்பழம்:
வாழைப் பழத்திலும் ஒரு விதமான கெமிக்கலை ஸ்பிரே செய்து விடுகின்றனர். இதனால் வாழைப்பழம் ஆனது விரைவில் பழுத்து விடுகிறது. இயற்கையாக பழுத்த பழம் என்றால் மாம்பழத்தை போன்றே கீழ் பகுதியில் இருந்து பழுக்க தொடங்கி காம்பானது பச்சையாக இருக்க வேண்டும். அதுவே செயற்கையாக பழுத்திருந்தால் காம்பு வரையிலுமே மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். இதனை வைத்து நாம் இயற்கையான பழத்தினை கண்டறியலாம். இவ்வாறு செயற்கையாக பழுத்த பழங்கள் இரண்டு நாள் மூன்று நாட்கள் கூட தாங்காது உடனேயே அழுகிவிடும்.
இதே முறையினை தான் அவகேடோ மற்றும் தக்காளி போன்ற பழங்களிலும் பயன்படுத்துகின்றனர். எனவே மக்களுக்கு இயற்கையாக பழுத்த பழம் எது? செயற்கையாக பழுக்க வைத்த பழம் எது என்ற விழிப்புணர்வு அவசியம் தேவை.

Exit mobile version