மீண்டும் காஷ்மீர் சென்ற த்ரிஷா! லியோ படம் குறித்து வெளிவந்த அப்டேட்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட் கொடுத்தது. தற்போது விஜயின் லியோ படத்தை இயக்கி வருகின்றார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் பூனம் பஜ்வா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு படக்குழு செல்லும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் காஷ்மீருக்கு படப்பிடிப்பிற்கு சென்ற சில தினங்களிலேயே த்ரிஷா சென்னை திரும்பிவிட்டார் .இந்த படத்தில் இருந்து இவர் விலகி விட்டார் என பரவும் செய்திகள் அனைத்தும் பொய் உண்மை இல்லை. மற்ற நடிகர்களுடன் படபிடிப்பு நடக்கிறது என த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக த்ரிஷா மீண்டும் காஷ்மீருக்கு சென்றுள்ளார் என அவருடைய தாயார் கூறியுள்ளார். அவர் நடிக்கும் முக்கிய காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருவதாகவும் த்ரிஷா லியோ படத்திலிருந்து விலகியதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என விளக்கம் அளித்துள்ளார்.