Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணமா நோ வே சொன்ன த்ரிஷா!! டேட்டிங்கும் ஒர்க்அவுட் ஆகவில்லை!!

Trisha who said no way to get married!! Dating is not a workout either!!

Trisha who said no way to get married!! Dating is not a workout either!!

மாடலிங் உலகில் மெட்ராஸ் அழகி பட்டம் பெற்ற பின்னும் சினிமா மீது நாட்டம் இல்லை என்று கூறி இருந்தவர் த்ரிஷா. அதன் பிறகு ஏற்பட்ட மனமாற்றத்தினால் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் லேசா லேசா படம் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர். இவர் அதிக வெற்றி படங்களையும், பெரும்பாலான முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். பின்னர் நயனுடன் ஏற்பட்ட போட்டியில் தோல்வியுற்று இருந்தார். அதன் பிறகு திரைக்கு பிரபலமான நடிகைகளால் மார்க்கெட் இழந்தார்.

பொன்னியின் செல்வன் பணத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து மீண்டும் ஹால் சீட்டை தக்க வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து லியோ, தற்சமயம் விடாமுயற்சி ஆகிய படங்களில் முண்ணனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு இவருக்கு தொழிலதிபர் வருனுடன் நிச்சயம் முடிந்த நிலையில் திருமணம் தடைப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பலரும் விவகாரத்து செய்யும் காரணத்தை கருதி தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார்.

அதை அவர் ஓப்பனாகவும் பதிவிட்டு இருந்தார். பாகுபலி படத்தில் வில்லனாக நடித்திருந்த ராணா த்ரிஷாவுடன் டேட்டிங்கில் 10 வருடம் இருந்ததாக அவரே கூறியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வரும் பிரிந்து விட்டோம் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் இவருக்குக டேட்டிங்கும் வொர்க் அவுட் ஆகவில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version