Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெயிலில் திரிஷாவின் அலம்பல்கள் ஏன் இந்த வேலை!

Trisha's swings in the sun Why this work!

Trisha's swings in the sun Why this work!

வெயிலில் திரிஷாவின் அலம்பல்கள் ஏன் இந்த வேலை!

பல வருடங்களாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா.ஆரம்பக்காலத்தில் “ஜோடி” என்னும் திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து வந்தார்.இன்று அதே ஹீரோயின் சிம்ரன் உடன் இணையாகக் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.தற்போது திரையலகில் 3 வது இடத்தில் இருப்பவர் நடிகை திரிஷா தான்.

இவர் ஹீரோயினாக நடிகர் சூர்யாவுடன் நடித்த “மௌனம் பேசியதே” என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி,கமல்,விஜய்,அஜித்,விக்ரம்,விஜய் சேதுபதி போன்ற தமிழ் நடிகர்கள் எல்லாருடனும் தாறுமாறாக நடித்து தள்ளிவிட்டார். ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய இனிமேல் எந்த ஒரு நடிகர் மீதும் காதல் வலையில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார் நடிகை திரிஷா. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்துக் கொண்டிருக்கிரப் படங்கள் என்னவென்றால் ராங்கி சுகர்,கர்ஜனை ராம் பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்பொழுது ஹிந்தியில் வெற்றி பெற்ற “பிக்கு” என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடிக்க உள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் இவர் நடித்த நீண்ட நாள்கள் கிடப்பின் இருந்த பரமபத விளையாட்டு ஹாட்ஸ்டார் OTT வலைத்தளத்தில் ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தற்போது திரிஷா ஃபிட்னஸ் விஷயத்தில் கவனமாக இருக்கும் ஆள் என்பதால் தற்போது சைக்கிலிங்க் உடற்பயிற்சி செய்து வரும் புகை படங்கள் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலகி வருகின்றது.

Exit mobile version