வெள்ளை மாளிகையில் டிரம்ப் கொரோனா வைரஸ் குறித்து ஆவேச பேச்சு

0
130
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது இதையொட்டி வெள்ளை மாளிகையில் மிக பிரமாண்டமாக  வேட்பாளர் தேர்வை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிரம்ப் கொரோனா வைரஸ் பற்றி பேசும்போது இந்த ஆண்டு இறுதிக்குள் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அவற்றை கொண்டு கொரோனாவை ஒழித்துக்கட்டலாம். அமெரிக்காவில் 3 வகையான கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அவை விரைவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்த ஆண்டுக்குள் கிடைக்கும் என்று கூறினார்.